கோவை மாவட்டம் வால்பாறை நகரை ஒட்டி உள்ளது புது தோட்டம் எஸ்டேட் .இங்குள்ள 10 ஏக்கரா என்ற. பகுதியில் உள்ள வனப்பகுதியில் மூன்று யானைகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில் இன்று மதியம் ஒற்றை காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது .அங்குள்ள கொய்யா மரத்தை சாய்த்து பழங்களை பறித்து சாப்பிட்டது. மரம் ஒடியும் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபொழுது காட்டு யானை அவர்களை விரட்டியது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி மேல் பகுதியில் நின்று கொண்டனர். வனத்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை சத்தமிட்டு அங்கிருந்து விரட்டினர்.தொடர்ந்து மூன்று காட்டு யானைகளும் அருகில் உள்ள வனத்தில் நிற்பதால் இரவு மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வரலாம் இன்று தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் உடனடியாக விரைந்து காட்டு யானைகளை மாற்றுப் பகுதிகளுக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.