Skip to content
Home » குடிமகன்கள் தகராறால் 1 மணிநேரம் டாஸ்மாக் கடை அடைப்பு..

குடிமகன்கள் தகராறால் 1 மணிநேரம் டாஸ்மாக் கடை அடைப்பு..

  • by Authour

தமிழகத்தில் பொது இடங்களில் காலி மதுபாட்டில்களை உடைப்பதை தடுக்கும் விதமாக     காலிபாட்டிலை மீண்டும் டாஸ்மார்க்   கடையிலேயே திருப்பி வாங்கிக் கொள்ளும் புதிய நடைமுறையை இன்றுமுதல் அமுல் படுத்தியுள்ளது.

டாஸ்மாக் கடையில் வாங்கும் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக வசூல் செய்யப்படும், பாட்டிலை வாங்கிய குடிமகன்கள் மதுவை அருந்திவிட்டு காலிபாட்டிலை கொடுத்தால்  ரூ.10ஐ திரும்பப் பெற்றுச் செல்லலாம் என்ற நடைமுறை வந்துள்ளது. .காலி பாட்டிலை மறுநாளும் அதே கடையில் அளித்துவிட்டு ரூ.10ஐ பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள  டாஸ்மாக்  கடையில் பாட்டிலுக்கு ரூ-10 என ஊழியர்கள் கேட்டபோது மது அருந்துவோர்கள் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தகராறு செய்தனர்.

ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பாட்டிலுக்கு ரூ-5 கூடுதலாக வாங்கப்பட்டு வருகிறது. அதை தவிர்க்க குடிமகன்கள்  புகார் அளித்தும அதிகாரிகள் இதுநாள்வரை தீர்க்கவில்லை

தற்பொழுது ரூ.15 அதிகமாக அளிக்க வேண்டும் என்று கடை ஊழியர்கள் சொல்லியதும் தகராறு ஏற்பட்டது, மதுவை வாங்கி எடுத்துக கொண்டு செல்பவர்கள் எப்படி மறுநாள் காலி பாட்டிலை மூட்டைக் கட்டிக் கொண்டுவர முடியும் ஏற்கனவே ரூ.5 தற்பொழுது ரூ.10 என எங்களிடமிருந்து பிடுங்குவது எந்தவகையில் நியாயம் என்று கேட்டு தகராறு செய்ததால் உடனடியாக டாஸ்மாக் கடையை இழுத்து மூடிவிட்டனர், உடனடியாக மயிலாடுதுறை போலீசார் சென்று சமாதானப்படுத்தி 1 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு கடை திறக்கப்பட்டது இதனால் அப்பதியில் பெரும் பரபரப்பு நிலவியது

டாஸ்மாக் கடை வாசலில் அமர்ந்து குடித்துவிட்டு காலி பாட்டிலை கொடுத்துவிட்டு ரூ.10ஐ வாங்கிச் சென்றனர்.  பெரும்பாலோர் எடுத்துச செல்பவர்கள் கூடுதலாக ரூ-15ஐ இழந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *