புதுக்கோட்டை இராணியர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்தார். மாணவிகளுக்கு மாத்திரைகளை வழங்கினார். உடன் இணை இயக்குநர் ஸ்ரீபிரியா தேன்மொழி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மஞ்சுளா, துணை இயக்குநர் ராம் கணேஷ், நமச்சிவாயம், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்..
இதனை தொடர்ந்து கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழியினை கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.