தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் மேலானமேடு பகுதியை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம்(53) விவசாயி. இவருக்கும், அதே பகுதி காட்டடி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன்(55) என்வருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக நடந்து வந்த வழக்கில் திருஞானசம்பந்தத்திற்கு சாதகமாக கோர்ட்டில் தீர்ப்பு வந்தது.
இன்று காலை திருஞானசம்பந்தம் இருசக்கரவாகனத்தில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ராஜேந்திரன் மற்றம் சிலர் சேர்ந்து திருஞானசம்பந்தத்தை வழிமறித்து வெட்டிக்கொலை செய்தனர். இது தொடர்பாக சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.
இந்த கொலையை கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரியும் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் சோழபுரம் ஆகிய இடங்களில் திருஞானசம்பந்தத்தின் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.