Skip to content

கிருஷ்ணகிரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு- 3 ஆசிரியர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம்  பர்கூர் அருகே உள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த மாணவியை அதே பள்ளியை சோந்த  ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பாஸ்கர் ஆகிய மூவரும்   பல நாட்களாக  பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இதில் அந்த மாணவி  கர்ப்பமாகி விட்டார். உடனடியாக அந்த மாணவிக்கு கருக்கலைப்பு  செய்து உள்ளனர். இதனால் அந்த மாணவி  கடந்த ஒருமாதமாக பள்ளிக்கு வரவில்லை. இந்த சம்பவம்  கருக்கலைப்புக்கு  பின்னரே பெற்றோருக்குதெரியவந்தது. அதன் பேரில் போலீசில் புகார் செய்தனர்.  போலீசார் ஆசிரியர்கள் 3 பேரையும்  போக்சோவில் கைது செய்தனர்.   3 ஆசிரியர்களும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.

தற்போது கிருஷ்ணகிரியில் இந்த பிரச்னை பூதாகரமாகி உள்ளது.  மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டு உள்ளனர்.  ஆசிரியர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அவர்கள்  போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

error: Content is protected !!