Skip to content

மாணவி பலாத்கார வழக்கு: கிருஷ்ணகிரி வக்கீல்கள் சங்கம் முக்கிய முடிவு

கிருஷ்ணகிரி மாவட்டம்  போச்சம்பள்ளி அருகே   அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்த மாணவியை அதே பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் சின்னசாமி (வயது57), ஆறுமுகம் (45), பிரகாஷ் (37) ஆகியோர்  பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி விட்டனர்.  இதனை அறிந்த பெற்றோர் அந்த  மாணவிக்கு அபார்சன் செய்தனர்.

இந்த விவகாரம் தமிழ்நாட்டில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.  பர்கூர் அனைத்து மகளிர் போலீசார்  போக்சோ சட்டப் பிரிவுகளின்கீழ்  வழக்குப்பதிவு செய்து 3 ஆசிரியர்களையும் கைது செய்து  சேலம் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில்     மேற்கண்ட 3 ஆசிரியர்களுக்காகவும், கிருஷ்ணகிரி மாவட்ட  வழக்கறிஞர்கள் கோர்ட்டில் ஆஜராக மாட்டார்கள் என வக்கீல்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

error: Content is protected !!