பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் திருச்சி பாஜக அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மக்கள் மீது சுமத்தப்பட்ட வரியை மறைப்பதற்காகவும் அதை திசை திருப்பத்தான் மத்திய பட்ஜெட் குறித்து நாடக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்றால் அதனை துறைவாரியாக சொல்லுங்கள் ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று சொல்வது தமிழக முதலமைச்சருக்கு அழகு அல்ல.
.தெலுங்கு தேசம், பிஜேபி இணைந்து போட்டியிடும் போது அமராவதி தலைநகராக கொண்டு செயல்படும் என தெரிவித்தப்பட்டது. அதன்படி சிறப்பு நிதி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை 3மாநிலமாக பரிக்க வேண்டும். சேலம், திருச்சி, மதுரை என 3 நகரங்களையும் 3 தலைநகராக பிரியுங்கள். அப்போது நிதி கேட்டு பெற்று கொள்ளுங்கள். அப்போது நாங்கள் 3மாநிலத்திற்கு 45ஆயிரம் கோடி வழங்க முடியும் .
Pay and Service கட்சியாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட். உள்ளது. மாதம், மாதம் டிவிடெண்ட் வாங்கும் கட்சியாக அந்த கட்சிகள் உள்ளது.மத்திய அரசின் வலிமையை குறைத்து கட்டினால் அது தேச விரோதம் தான்.
முதல்வருக்கு எதிராக பேசினால் வழக்கு தொடுக்கப்படுகிறது. திமுக பேசிய பேச்சுக்கு வழக்கு போட்டால் ஸ்டாலின் 10 வருடம் சிறைக்குள் இருக்க வேண்டி வரும்.
பொன்முடி வழக்கு வந்த போது மத்திய அரசு குற்றவாளி போல காட்டியது.
உச்சநீதிமன்றம் விடுவித்த போது மத்திய அரச மீது பேச்சு இல்லை. நீதிமன்றத்துடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை.
பல ஊழல் செய்தும் மத்திய அரசு திமுகவை கண்டு கொள்ளவில்லை என மத்திய அரசின் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக 40தொகுதியை திமுகவுக்கு கொடுத்து விட்டார்கள் என்பது என் கருத்து.
கட்சியின் கருத்து அல்ல. அமைச்சர் நேரு மறைமுகமாக எங்களுக்கு ஆதரவு தந்தால் அதனை நாங்கள் வரவேற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.