கிருஷ்ணகிரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: பாஜக தேசிய தலைவர்கள் எங்களோடு பேச்சு வார்த்தை நடத்தினாலும் எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை. பாஜக உடனான கூட்டணியை முறிப்பது என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு; அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கூறுவது நடக்காது.
பாஜக கூட்டணியில் நேரம் வரும்போது அதிமுக சேர்ந்துவிடும் என்பது கவனத்தைத் திசைதிருப்பும் செயல். 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டோம். அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. அண்ணாமலையை மாற்றும் கோரிக்கையை வைப்பது சிறுபிள்ளைத்தனமானது. அண்ணாமலையை மாற்றக் கோருவது எங்கள் எண்ணம் இல்லை; நாகரீகமான தலைவர்கள் எங்களிடம் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.