அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகளத்தூர் கிராமத்தில் ஜெஜெநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு வலம்புரி ஜெய விநாயகர் திருக்கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக நத்தக்குழி சிவஸ்ரீ சந்திரசேகர் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை நடைபெற்றது.
இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற இரண்டு கால யாகசாலை பூஜைகள் முடிவற்ற பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு கோவிலைச் சுற்றி வலம் வந்தது இதனையடுத்து கோவில் விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீரை ஊற்ற பக்த கோடிகளின் அரோகரா கோஷம் ஒலிக்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து புனித நீரானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேக வைபவத்தைக் காண சிறுகளத்தூர் கிராமத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் , வழங்கப்பட்டது.