Skip to content
Home » கோவையில் இளைஞர் வெட்டிக்கொலை

கோவையில் இளைஞர் வெட்டிக்கொலை

கோவை மாநகர எல்லைக்குட்பட்ட  வெள்ளலூரை சேர்ந்த இளைஞர்   இன்பரசன். இவர் இன்று மதியம்  வீட்டில் இருந்தபோது  திடீரென 3 இளைஞர்கள் அங்கு வந்தனர்.  அவர்கள் திடீரென  வீடு புகுந்து    இன்பரசனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்தார்.  தகவல் அறிந்ததும் போலீசார் வந்து  இன்பரசன் உடலை கைப்பற்றி   உடற் கூறு ஆய்வுக்காக   மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இன்பரசனை வெட்டிய நபர்கள்  ஒரே காரில் வந்ததாக தெரிகிறது.  இன்பரசன் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது மர்மமாக உள்ளது.  இந்த  சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.