Skip to content

4200கி.மீ. விழிப்புணர்வு சைக்கிள் பயணம்…கோவை வாலிபருக்கு வரவேற்பு

  • by Authour

கோவையை சேர்ந்த இளைஞர் சிவசூரியன் செந்தில்ராமன். இவர் தனது சிறுவயதில் இருந்து சைக்கிள் பயணம் மீதும் சமூகத்தின் மீதும் மிகவும் அக்கறை கொண்டவர். அதே போல சைக்கிளில் பயணம் செய்து மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் பசுமை இந்தியா மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்து பள்ளி கல்லூரி மாணவர்கள்,  பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4200 கி.மீ தூர  விழிப்புணர்வு தனிமனித சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 3ஆம் தேதி காஷ்மீரில் துவக்கிய இந்த விழிப்புணர்வு பயணத்தை கன்னியாகுமரி வரை சென்று முடிக்க இருக்கிறார்.  வழியில் கோவை வந்த அவருக்கு கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என 4200 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு சாதனையை நிகழ்த்தும் சிவசூரியனுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!