Skip to content

கோவை வரும் அமித்ஷாவிற்கு கருப்பு கொடி…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகின்ற 25ம் தேதி கோவைக்கு வருகை புரிகிறார். 25ம் தேதி மாலை விமானம் மூலம் கோவைக்கு வரும் அவர் 26ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் அவருக்கு கருப்பு கொடி காட்டுவதற்கு பெரியாரிய அமைப்புகள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் முடிவெடுத்துள்ளனர். காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேட்டியளித்த தபெதிக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன், மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்ததாகவும் மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதியை தர மாட்டோம் என்று இந்தியை திணிக்க முயல்வதாகவும் கூறிய அவர் அதனை கண்டிக்கும் வகையில் கோவைக்கு வரும் அமித்ஷாவிற்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். இதில் 20க்கும் மேற்பட்ட அமைப்பினர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறினார்.

error: Content is protected !!