கோவை மாவட்டம், பேரூர் பகுதியைச் சேர்ந்த சசி என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சன் ரூஃப் பொருத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். பயணிகள் மற்றும் டெலிவரி சேவைகளை வழங்கி வரும் இவர், வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்துடன் இந்த புதுமையான முயற்சியை மேற்கொண்டு உள்ளார்.
சசி இதுகுறித்து கூறுகையில்,
நான் டெலிவரி வேலை செய்வதால் நாள் முழுவதும் வெயிலிலும் மழையிலும் பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் என்னை மிகவும் பாதித்தது. மேலும், எனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் குழந்தைகளும் வெயிலால் சிரமப்பட்டனர். இதனை தவிர்க்கவே ஆன்லைனில் சன் ரூஃப் வாங்கி எனது வாகனத்தில் பொருத்திக் கொண்டேன் .
இந்த சன் ரூஃப் கோடை வெயிலில் இருந்து அவரையும், பயணிகளையும் மட்டுமல்லாமல், வாகனத்தையும் பாதுகாக்கிறது. வெயிலின் தாக்கம் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, மழைக் காலங்களில் மழைக்காக ஒதுங்கி நிற்காமல் குறித்த நேரத்தில் டெலிவரி செய்ய முடிகிறது. இதனால் எனது நேரம் மிச்சமாகிறது. கோவை மாநகராட்சி பல இடங்களில் நிழல் பந்தல் அமைத்து இருந்தாலும், அது குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பயனு உள்ளதாக இருக்கிறது. ஆனால் இந்த சன் ரூஃப் எனது வாகனத்திலேயே இருப்பதால் எங்கு சென்றாலும் வெயிலின் தாக்கம் இல்லாமல் பயணிக்க முடிகிறது என்று சசி மகிழ்ச்சியுடன் கூறினார்.
சன் ரூஃப் பொருத்திய இருசக்கர வாகனம் செல்வதை கோவை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
சசியின் இந்த புதுமையான முயற்சி பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.