Skip to content
Home » கோவைக்கு திதி கொடுக்க வந்த கேரளா நபர் மயங்கி விழுந்து பலி…

கோவைக்கு திதி கொடுக்க வந்த கேரளா நபர் மயங்கி விழுந்து பலி…

  • by Senthil

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி என்கிற பாபு (55). மர ஆசாரி மற்றும் கோவில்களில் சண்டமேளம் வாசித்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனலட்சுமியின் அக்கா காலமானார். அவருக்கு திதி கொடுப்பதற்காக நாராயணசாமி, தனலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் வேனில் இன்று காலை கோவை வந்தனர். முன்னதாக பேரூர் படித்துறை திதி கொடுத்துவிட்டு, பேரூர் பட்டீஸ்வரரை தரிசனம் செய்தனர். பின்னர் காலபைரவர் சன்னதியில் தரிசனம் செய்த போது நாராயணசாமி திடிரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உறவினர்கள் 108 ஆம்புலென்ஸிக்கு அழைத்தனர். அதில் வந்த அவசரகால மருத்துவர் பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதைகேட்டு கதறி அழுத உறவினர்களால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பேரூர் கிராம நிர்வாக அலுவலர், பேரூர் போலீசார் விசாரணைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் பக்தர் ஒருவர் உயிரிழந்ததால் பேரூர் கோவில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் வாஸ்து சாந்தி செய்து நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!