முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, சுதந்திர போராட்ட வீரர் தளபதி இராமசாமி பண்ணாடியாரின் 220வது நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
1804ல் ஆங்கிலேயரை எதிர்த்து கோவையில் துவங்கி சேலம்வரை ஆயுத போராட்டம் நடத்திய புரட்சிப்படை தலைவர் தளபதி இராமசாமி பண்ணாடி அவர்களின் 220 வது நினைவுதின வீரவணக்க கூட்டம் கோவை வேடப்பட்டி வன்னியம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு சிறப்பித்தார். அவருக்கு விழாகுழுவினர் சார்பில் உற்சாக வரவேற்பளித்தனர்.
மேலும் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி.
இந்த பகுதியில் 50 ஆண்டுகளாக பட்டா இல்லாத மக்களுக்கு அதிமுக ஆட்சியில் பட்டா வாங்கிகொடுத்து முக்கிய நிகழ்ச்சி, அதுபோல் முக்கியமான நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி, ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலேயரை எதிர்த்து ரத்தம் சிந்தி போராட்டத்தின் மூலம் சுதந்திரம் பெற்று தந்தார்கள். அதிலும் மிக முக்கியமானவர் தளபதி இராமசாமி பண்ணாடியார் அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர், ஆங்கிலேயர்களின் வரி விதிப்பை எதிர்த்து ஆயுதப்போராட்டத்தை கோவையில் இருந்து துவங்கி சேலம் வரை நடத்தினார். மேலும் திப்புசுல்தான், சுப்தரலிங்கனார், மருதுசகோதரர்கள், மற்றும் தீர்ன் சின்னமலை ஆகியோருடன் இனைந்து ஒற்றுமையாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர் என்று தளபதி இராமசாமிபண்ணாடியாருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.மேலும் இவரது நினைவு நாளை கொண்டாடுவதன் மூலம் இளைஞர்கள் நாட்டுப்பற்றுடன் இருக்கவேண்டும், அதுபோல் இந்த அரசு இராமசாமி பண்ணாடியாருக்கு நினைவு நாளை கொண்டாடவேண்டும். மேலும் தளபதி இராமசாமி பண்ணாடியார் அவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துகொள்வதாகவும் தெரிவித்தார்