கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான லாரி பட்டறை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இரவு வெல்டிங் பணிக்காக வேதிப்பொருட்களை ஏற்றி செல்லக்கூடிய டேங்கர் லாரி ஒன்று வந்துள்ளது. இதனை அடுத்து இன்று காலை வடமாநிலத்தை சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் லாரியில் வெல்டிங் பணியை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வேதிப்பொருட்கள் அடைக்கப்பட்டிருக்கும் டேங்கர் வெடித்து சிதறியுள்ளது. இச்சம்பவத்தில்
வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த வாகில்(Vokkil) என்ற உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ரவி என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செட்டிபாளையம் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.