கோவை, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் சீதோசன நிலை மாற்றம் காரணமாக சூறாவளி காற்று வீசி வருகிறது, இதை அடுத்து ஆழியார் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் திடீரென பலத்த சூறாவளி காற்று வீச தொடங்கியது இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன. மேலும் ஆங்காங்கே மரக்கிளைகளும் முறிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழியார் பூங்கா அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீதும் மரம் விழுந்ததால் கார் முழுவதும்
சேதம் அடைந்தது அதேபோல் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மிகப்பெரிய ராட்சச மரம் ஒன்று விழுந்ததில் நான்கு வீடு பாதிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து தற்பொழுது வரை சூறாவளி காற்று வீசி வருவதால் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் ஆழியார் வால்பாறை சாலை தற்போது வெறி ஜோடி காணப்பட்டு சாலை முழுவதும் மரங்களும் மரக்கிளைகளுமாக உள்ளது .