கோவை எஸ்.எஸ்.வி.எம் உலக பள்ளியில் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும் திறனை கட்டமைத்துக் கொள்ளவும் மாணவர்களுக்கு அவசியமான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த பயனுள்ள நிகழ்வுகளை கொண்ட இந்த நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சி.பி.எஸ்.இ துணை செயலாளர் சதீஷ்குமார் துவக்கி வைத்து பேசினார்.வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மாணவர்கள் திறனை வளர்த்துக் கொள்வதன் பங்கு குறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் பேசினார்.
வேலைவாய்ப்பு துறை இயக்குனர் டாக்டர் பி. மஞ்சு, வாழ்வியல் பரிந்துரைகளையும், சுய மதிப்பீட்டின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார்.திறன் வளர்ப்பில் ஊடகங்கள்,
பொழுதுபோக்கு அம்சங்கள் திறன் மேம்பாட்டு கவுன்சிலின் (எம்.இ.எஸ்.சி) பங்கை வலியுறுத்தி தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு நிபுணர் ஜீவன் உத்தமன் பேசினார். எம்.இ.எஸ்.சி யின் திட்ட தலைவர் ஹீனா பரத்வாஜ், திறன் மேம்பாட்டில் எம்.இ.எஸ்.சி.யின் பயன்பாடுகள் குறித்து விளக்கினார்.
ஐபிஎம் நிறுவனத்தின் முதுநிலை மென்பொருள் மேம்பாட்டாளர் அருண் குமார் பேசுகையில், வளர்ந்து வரும் திறன் மேம்பாட்டில் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்து விளக்கினார். 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இந்த சி.பி.எஸ்.இ.திறன் கண்காட்சி 2024 விழாவில், 30 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 49 புதுமையான திட்டங்களை பார்வைக்கு வைத்திருந்தனர். செயற்கை நுண்ணறிவு, கிளவுட் தொழில்நுட்ப நிபுணர்கள், ஐபிஎம் முதுநிலை மென்பாருள் கட்டமைப்பாளர்கள் பிரகாஷ் முத்துசாமி, சிவக்குமார் சின்னசாமி தலைமையிலான நடுவர் குழு, இவற்றை பரிசீலனை செய்தது.எஸ்.எஸ்.வி.எம். வேர்ல்டு பள்ளியில், மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும், உருவாக்கத்திறனை வளர்க்கவும் உதவும் வகையில் நிகழ்ச்சி அமைந்திருந்தது. அதற்கு ஏற்ப எஸ்.எஸ்.வி.எம். பள்ளியின் அடிப்படை கட்டமைப்புகள் அமைந்துள்ளன.