சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரியம் தென்றல் நகர் பகுதியை சூலூர் பேரூராட்சியுடன் இணைக்க கோரியும் கோவை சூலூர், கலங்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தென்றல் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
தென்றல் நகர் பகுதி மக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர் வசதி இல்லாததால் பல கிலோமீட்டர் பயணம் செய்து குடிநீர் பெற்று வரும்
1சூழல் ஏற்படுகிறது. மேலும் எங்கள் பகுதியில் உள்ள சாலைகள் சேதம் அடைந்து காணப்படுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.” என்று அவர்கள் கூறினார்.
“இது குறித்து பஞ்சாயத்து தலைவரிடம் பலமுறை முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் நேரத்தின் போது மட்டும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்படுகிறது. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.”என்று அவர்கள் குற்றம் சாட்டினர். தென்றல் நகர் பகுதியை சூலூர் பேரூராட்சியுடன் இணைப்பதே தங்களது பிரதான கோரிக்கை என்று கூறிய அவர்கள், கோரிக்கைகளை ஏற்று தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்