கோவை 100 அடி ரோடு 9″ஆவது வீதியில் குடியிருந்து வருபவர் சுப்ரமணி.
இவருடைய வீட்டில் தண்ணீர் அளவிடும் மீட்டர் பாக்சில் 4″அடி நீள சாரைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது.
இது குறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில் பாம்பு பிடி வீரரான சஞ்சய் விரைந்து வந்து மீட்டர் பாக்சில் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார்.
இதேபோல் ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 6 அடி நீள சாரை பாம்பையும் பாம்பு பிடி வீரர் சஞ்சய் பிடித்தார்.
பிடிபட்ட இரண்டு பாம்புகளையும் வனத் துறையினரிடம் ஒப்படைக் கப்பட்டது.
வனத்துறையினர் பாம்புகளை மதுக்கரையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட்டபட்டது.