கல்வியற்வித்தல் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்றது. விஜயசதமி முன்னிட்டு வழிபாடுகளுடன் குழந்தைகளின் கல்வி கற்றல் தொடங்குவது வழக்கம். அதன்படி ஐயப்பன் கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் விரலைப் பிடித்து அரிசியில் தாய் மொழி எழுத்துக்களையோ சாமி பெயர்களையோ பிள்ளையார் சுழி,அம்மா,அப்பா என்று எழுத வைப்பர்.
இன்றைய தினம் கல்வியைத் துவங்கினால் குழந்தைகள் படிப்பில் சாதிப்பார்கள் என்பது ஐதீகம்.
அதன்படி சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
மேலும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு முன்பதிவு செய்து தொடர்ந்து வருகை புரிந்து வருகின்றனர்.