Skip to content
Home » கோவை … செம்மனூர் ஜுவெல்லர்ஸ் நகைக்கடையை திறந்து வைத்த நடிகை ஹன்சிகா ..

கோவை … செம்மனூர் ஜுவெல்லர்ஸ் நகைக்கடையை திறந்து வைத்த நடிகை ஹன்சிகா ..

  • by Authour

கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் பாபி செம்மனூரின் நகைகடைகளில் ஒன்றான செம்மனூர் ஜுவெல்லர்ஸ் கோவை டவுன்ஹால் பிக் பஜார் பகுதியில் இயங்கி வருகிறது. தற்போது அந்த கடை புதுபிக்கப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகை ஹன்சிகா மோட்வானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதுபிக்கப்பட்ட செம்மனூர் ஜுவெல்லர்ஸ் கடையை திறந்து வைத்தார். மேலும் கடையை பார்வையிட்டு சில வாடிக்கையாளர்களுக்கு நகைகளை வழங்கினார். தற்பொழுது திறக்கப்பட்ட இந்த நகைக்கடையில் வைர ஆபரணங்கள், HUID 916 தங்க நகை கலெக்‌ஷன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் தொடக்க விழா சிறப்பு சலுகையாக வைர ஆபரணங்களை வாங்கும் பொழுது தங்க மோதிரம்,

ஐபோன் மற்றும் பல்வேறு பரிசுகளும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள வெட்டப்படாத வைரங்களை வாங்கும் பொழுது தங்க நாணயங்கள் இலவசமாக வழங்கப்படும் என கடையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஷோரூமில் வாங்கும் ஒவ்வொரு ஆபரணங்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செம்மனூர் ஜுவெல்லர்ஸ் குழு இயக்குநர் ஷாம் சிபின், மற்றும் நிர்வாகிகள், இந்த கடை தங்களின் 59வது கிளை எனவும் இனிவரும் காலங்களில் சென்னை கர்நாடகா என பல்வேறு இடங்களில் கிளைகளை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நிர்வாகிகள் வைர நகைகளுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி அளிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் மிகக் குறைந்த செய்கூலியும் இங்கு தான் என தெரிவித்தனர்.