Skip to content
Home » கோவை செல்வராஜ் உடலுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அஞ்சலி

கோவை செல்வராஜ் உடலுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அஞ்சலி

  • by Senthil

முன்னாள் எம்எல்ஏவும், திமுக செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜ் நேற்றைய தினம் திருப்பதியில் காலமானார். அவரது உடல் நேற்றிரவு கோவைக்கு கொண்டு வரப்பட்டது. கோவை செல்வராஜ் உடலுக்கு இன்று காலை தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் .வி.செந்தில்பாலாஜி  நேரில் அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

அவருடன், திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாநகர் மாவட்ட

செயலாளர் நா.கார்த்திக் Ex Mla, வடக்கு மாவட்ட செயலாளர் தொஅ.ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், பகுதி கழக செயலாளர் கார்த்திக் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர் சோமு சந்தோஷ், டவுன் ஆனந்த் உள்ளிட்ட பலர் வந்து அஞ்சலி செலுத்தினர். கோவை செல்வராஜ் மறைவிற்கு முதல்வர் அவர்கள் ஏற்கனவே இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த கோவை செல்வராஜ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!