Skip to content

கோவையில் பள்ளி மாணவர்களுக்கான அபாகஸ் போட்டி..

கோவையில் SIP அகாடமி இந்தியா, சார்பில் தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களுக்கான மேற்கு மண்டல அளவிலான அபாகஸ் போட்டி 2024 நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 1000 எஸ்ஐபி அபாகஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளியின் முதல்வர் திருமதி உஷாராணி கலந்து

கொண்டார். இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில், அபாகஸ், பெருக்கல் மற்றும் காட்சி எண்கணிதத் தொகைகளை உள்ளடக்கிய 300 கணிதப் தீர்வுகளை குழந்தைகள் 11 நிமிடங்களில் தீர்த்தனர்.

இது நிகழ்வின் 7வது பதிப்பாகும். முந்தைய ஆண்டு தேசிய நிகழ்வுகள் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் நடைபெற்ற போட்டியின் அளவு மற்றும் வடிவத்திற்காக 4 LIMCA சாதனை புத்தகங்களை எட்டியுள்ளன. SIP அபாகஸ் இந்தியா ஊழியர்களுடன் 1000 மாணவர்களின் பெற்றோர்கள் இந்த மாபெரும் போட்டியைக் காண வந்திருந்தனர். விழாவில் மொத்தம் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!