கோவை மாவட்டத்தில் சாகுபடிக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சமீப காலமாக உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு உரங்கள் வினியோகம் செய்ய கோரிக்கை விடப்பட்டிருந்தது.இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து,சரக்கு இரயில் மூலம் சுமார் 1300 மெட்ரிக் டன் உரம் கோவை வந்தடைந்தது.. ஸ்பிக் மற்றும் க்ரீன் ஸ்டார் உர நிறுவனம் மூலமாக கொண்டு வரப்பட்ட இதில்,யூரியா,பாரத் டி.ஏ.பி,,பாரத் காம்ப்ளக்ஸ்,பாரத் சூப்பர் பாஸ்பேட் போன்ற உரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.. இந்நிலையில் இரயில் நிலையம் வந்த வேளாண் அதிகாரிகள் பெருமாள். சாமி, சக்திவேல்,மற்றும் சக்தி ஃபெர்டிலைசர் பாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில்,உரங்கள் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்துக்கு தேவையான அளவு பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்துக்கு ஒதுக்கீடுபெறப்பட்ட யூரியா உரம் அனைத்து வட்டாரங்களில் உள்ள கூட்டுறவு கடன் சங்க விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளது.இதன் மூலம்,மானிய விலை உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டுக்கு தங்கள் கடை மூலம் உரம் விற்பனை செய்தாலோ, மானிய விலை உரங்களை மற்ற மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கினாலோ கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.