கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில் நக மன்ற தலைவர் சியாமளா தலைமையில் இன்று சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இதில் நகர செயலளார் நவநீத கிருஷ்ணன் துணைச் செயலாளர் தர்மராஜ் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து தென்சங்கபாளையம் ஊராட்சி அமைந்துள்ள பெரியார் சமத்துவ புரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலு வால்பாறை துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை
உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் ஏராளமான கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கிராமிய நிகழ்ச்சிகள் பள்ளி மாணவ மாணவிகள் கிராமிய நடனங்கள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட இரட்டை இஸ்லாமிய சகோதரிகள் கிராமிய நடனத்திற்கு பின் தமிழக முதலமைச்சரின் சமத்துவ பொங்கல் விழா ஜாதி மதம் இன்றி அனைவரின் ஒற்றுமையின் வெளிப்படுத்தும் விதமாக உள்ளது என்று தெரிவித்தனர். இது அங்கு இருந்த பொதுமக்களை உருக்கமடைய செய்தது.