ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் மற்றும் சேக்புரோ சார்பில் “ரோட்டோ ரைட் ஆர் ரன் 2023”; நிகழ்ச்சியானது நாம் நடந்து மற்றவர்களையும் நடக்கவைப்போம் என்ற கருப்பொருளில் இன்று நடைபெற்றது.
8 – 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு செயற்கை கால் வழங்க நிதி திரட்டும் வகையில் “ரோடோ ரைட் ஆர் ரன்” என்ற பெயரில் நடை, ஓட்டம் மற்றும் சைக்கிளிங் நிகழ்வு இன்று காலை 6.00 மணியளவில் கோவை அவினாசி சாலையில் உள்ள ஸ்ரீ ஆர். கே. சண்முகம் செட்டியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வை கோவை மாநகர காவல் துறை ஆனையாளர் வி. பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
ரோட்டரி மாவட்டம் 3201 அமைப்பின் 2025 – 2026 ஆண்டு புதிய ஆளுனராக பதவியேற்க உள்ள ரோட்டேரியன் செல்லா கே. ராகவேந்தர் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்வில் பல்வேறு ஓட்டச் சங்கங்களும் மற்றும் கோவை காவல் பயிற்சி பளிளியை சேர்ந்த 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு குறித்து “ரோடோ ரைட் ஆர் ரன்” திட்டத்தலைவர் ரோட்டேரியன் லட்சுமி நாராயணன் கூறுகையில்
இந்த “ரோடோ ரைட் ஆர் ரன்” நிகழ்வு மூலம் கிடைக்கும் தொகையானது கோவை மற்றும் அதன் அருகே உள்ள மாவட்டங்களை சேர்ந்த 8 – 14 வயதுக்கு உட்பட்ட செயற்கை கால் பொருத்த வேண்டிய நிலையில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு நிதி திரட்டும் நிகழ்வாக நடைபெறுகின்றது.
கால்கள் வளைந்து, டி.என்.ஏ. குறைபாடு உள்ள குழந்தைகள், நிற்க, நடக்க முடியாத குழந்தைகளுக்கு இந்த செயற்கை கால்கள் வழங்கப்படும். இந்த நிகழ்வில் பெறப்படும் நிதியானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 – ம் தேதி உலக ஊனமுற்றோர் தினத்தில் செயற்கை கால்கள் வழங்கப்படும்.
ஒரு சில பயனாளிகளுக்கு ஒரு முறை மட்டுமல்லாது அவர்களின் உடல் வளர்ச்சி ஏற்ப தொடர்ந்து அவர்களுக்கு செயற்கை கால்கள் தேவைப்படும். இவர்களின் தேவைக்கு ஏற்ப ரோட்டரி கிளப் மிட்டவுன் தனது சொந்த பட்டறையில் பயனாளிகளுக்கு அளவு எடுத்து செயற்கை கால்கள் செய்து தரப்படுகின்றன.
இந்த திட்டத்தின் மூலம் இது வரை 300 பேர் பயன் அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 70 குழந்தைகளும் 30 ஊனமுற்ற நபர்களும் எங்களை அனுகியுள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு செயற்கை கால்களின் தேவை கூடிக்கொண்டு செல்கின்றது. ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் வழங்கப்படும் செயற்கை கால்கள் ஆண்டு தோறும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களுக்கு மாற்றி வழங்கப்படும்.