Skip to content

கோவை சாலையில் கார் ஒன்றுக்கொன்று மோதி விபத்து…. உயிர்தப்பிய 5 பேர்…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோவை நான்கு வழி சாலையில் தினசரி இருசக்கர வாகனம் மற்றும் கார், கனரா வாகனங்கள் என அதிக அளவில் செல்கின்றன,சாலை கடக்கும்போதும் எதிர்ப்புறமாக கிராமங்களுக்கு வாகனங்கள் செல்லும் பொழுது திடீர் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன, நெடுஞ்சாலைத்துறை சார்பில் இரண்டு கிலோ மீட்டருக்கு தூரத்தில் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டு விபத்துக்கள் தடுக்கும் வண்ணமாக செயல்படுத்தப்பட்டுள்ளது, இதையடுத்து பொள்ளாச்சி வடுக பாளையத்தைச் சேர்ந்த சேர்ந்த பாலசுப்பிரமணியம் உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் கோவைக்கு தனது காருடன் சென்றுள்ளார்,பொள்ளாச்சி அருகே உள்ள நாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரவிவர்மா தனியார் கம்பெனியில் பணிபுரிவதால் தனது காரில் கோவைக்கு செல்லும் பொழுது கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக் குளம் பகுதியில் பாலசுப்பிரமணியம் வலது புறம் இருந்து இடதுபுறம் செல்லும் பொழுது திடீரென பின்புறம் வந்து ரவிவர்மா ஓட்டிய கார் முட்டியதால் விபத்து ஏற்பட்டது,ரவிவர்மா ஓட்டியக்கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த இரும்பால் பொருத்தப்பட்ட தகரத்தில் இடித்து நடு ரோட்டில் நின்றது,விபத்து குறித்து பொதுமக்கள் கிணத்துக்கடவு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததன் பெயரில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,இந்த விபத்தில் பயணித்த பெண்கள் உட்பட ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *