கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக அதன் தலைவர் புவனா சதீஷ்குமார் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்,கல்வி மற்றும் மருத்துவ உதவி, போக்குவரத்து சிக்னல்கள் அமைக்க நிதி உதவி என பல்வேறு சமூக நலப்பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக, உள் நாட்டு பாதுகாப்பு பணிகளில்,முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வரும்,ஊர்க்காவல் படையினர் பணிகளின் போது
பாதுகாப்பாக பணியாற்றும் வகையில் ரிப்ளக்டர் ஜாக்கெட்டுகள் வழங்கும் விழா கோவை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் கலந்தி கொண்ட மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னதாக அலுவலக வளாகத்தில் இருந்த பிரம்மாண்ட தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.
தொடர்ந்து அவர்,திருவிழா, பண்டிகை நேரங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில், கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது,, கட்சி தலைவர்கள் வருகையின் போதும், அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது போன்ற பணிகளை செய்து வரும் சுமார் நூறுக்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு ரிப்ளக்டர் உடைகளை வழங்கினார்.. இன்னர் வீல் கிளப் அமைப்பின் தலைவர் புவனா சதீஷ்,ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,கோவை மாநகர ஊர்க்காவல் படை உதவி ஆணையர் தேன்மொழி ராஜராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.. இரவு நேர பணிகளின் போது ஊர்க்காவல் படையினரின் பாதுகாப்பு கருதி இந்த உடைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது..