Skip to content
Home » கோவையில் ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்…

கோவையில் ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்…

  • by Senthil

கோவையில் எஸ். ஆர். எம். யூ. மற்றும் ஏ. ஐ. ஆர். எஃப். ஒன்றிய அரசாங்கத்தின் புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் நடுத்தர ஏழை எளிய மக்களின் போக்குவரத்துக்கு வாரமாக இருக்கும் ரயில்வே துறையை தனியாருக்கு தாரை பார்க்கும் நடவடிக்கையை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். தென்னக ரயில்வே மஸ்தூர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்ணையா தலைமையில், 500 க்கும் மேற்பட்டோர் கோவை ரயில் நிலைய முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 2003 ஆம் ஆண்டு வரை ரயில்வே பணியில் சேர்ந்தவர்களுக்கு, அடிப்படை ஊதியம் 50 சதவிகிதம் மற்றும் பஞ்சப்பட்டி 46 சதவீதம் என ஓய்வூதியம் தரப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய் அடிப்படை ஊதியம் உள்ள ஊழியர் ஒருவரின், 50 % அடிப்படை ஊதியத்தியமாக் 21 ஆயிரம் மற்றும் பஞ்சப்படியாக 46 % 19,320 (தற்போதை நிலவரம்) என மொத்தமாக 40 ஆயிரத்து 320 ரூபாயை ஓய்வூதியமாக தரப்படுகின்றன.

இந்த பென்ஷன், ஓய்வு பெற்றிருக்கின்ற ஊழியர்கள் இறந்த பின்னர், அவரது மனைவி இறக்கும் வரையிலும், குழந்தைகளுக்கும் குறிப்பிட்ட வயது வரையிலும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு இந்த பென்சனானது தரப்படும் . ஆனால் புதிய பென்ஷன் சட்டத்தின் கீழ், பழைய பென்ஷன் திட்டத்தில் உள்ள பலன்கள் தருவதில்லை. 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் ஊதியத்திலிருந்து 10% பிடித்தம் செய்யப்படுகின்றன. அதனுடன் அவர்கள் ஊதியத்துக்கு நிகரான 14 சதவிகித அரசாங்கம் பங்களிப்பு தருகின்றனர். இந்த தொகையை மொத்தமாக வைப்பு வைத்து, 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் ஓய்வு பெறும் பொழுது, 40 சதவீத

தொகையை செட்டில்மெண்ட் தொகையாக தருகின்றனர். மீதமுள்ள 60% தொகையை எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., யூ.டி.ஐ., உள்ளிட்டவற்றில் முதலீடு செய்கின்றனர். அதில் வரும் லாபத்தை எடுத்து ஓய்வூதியமாக தருகின்றனர். ஓய்வு பெற்ற பின் புதிய ஓய்வூதி திட்டத்திலிருக்கின்ற ரயில்வே ஊழியருக்கு 70 வயது வரை ஓய்வு ஊதியம் தரப்படுகின்றன. 70 வயதுக்கு மேல் அவருக்கு ஓய்வூதியம் தரப்படுவதில்லை. 70 வயதுக்குள்ளாக அவர் இறந்தால், அவரது வாரிசுதாரர்களுக்கு ரயில்வே ஊழியரின் 70 வயதுக்கான ஓய்வூதியம் மட்டுமே தரப்படுகின்றன. இந்த நிலையிலெ 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவரின் அடிப்படை ஊதியம் 41 ஆயிரம் ரூபாய் என்றால், அவருக்கான பென்ஷன் 2500 முதல் 3000 வரை கிடைக்கும் வகையிலேயே தற்பொழுது வழிவகை செய்யப்பட்டு இருக்கின்றன. 2003 ஆம் ஆண்டு பழி ஓய்வூதி திட்டத்தின் கீழ் ஒருவர் பெரும் பென்சனை ஒப்பிடும்பொழுது, 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த புதிய ஓய்வூதிய திட்ட ஊழியர்களுக்கு தரப்படும் பென்சன் தொகை சொற்பம்.

இந்த பென்ஷன் திட்டம் ஒரு சமூக பாதுகாப்பு இல்லாதது என குமுறும் போராட்டக்காரர்கள் ஊழியர்கள் , புதிய ஓய்வூதி திட்டத்தை ஒன்றிய அரசாங்கம் ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். ரயில்வே துறையை பொருத்தவரையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு பொது சேவையாக இருக்கின்றன. நடுத்தர ஏழை எளிய வர்க்கத்தினர் பெருமளவில் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி ரயில்வேயில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் தனியாருக்கு தாரை பார்க்கும் ஒன்றிய அரசாங்கத்தின் கேள்வி துறையை நடவடிக்கை என்பது ஏழை எளிய மக்களின் ரயில் சேவையை பெருமளவில் பாதிக்கும் என தெரிவித்தனர். தனியாருக்கு தாரை பார்க்கும் பொழுது கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டிருக்கின். பயணத்திற்கான கட்டண தொகையில் விகிதம் 16 சதவீதம் அரசாங்கம் மானியமாக தருகின்றனர் ஆனால் தற்பொழுது அந்த நிலை தொகையில் பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டு இருக்கின்றன எனவே ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் எனவும் உண்ணாவிரதத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தென்னக ரயில்வே ஊழியர்கள் போராட்டக்காரர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!