Skip to content

கோவையில் வேலை வாய்ப்பு முகாம்…. ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்…

கோவையில் ரோட்டரி கிளப் ஆப் மில்லினியம் 25 வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக வேலை வாய்ப்பு முகாம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது…

ரோட்டரி கிளப் மில்லினியம் தலைவர் சந்தான குமார் மற்றும் நிர்வாகிகள் செபாஸ்டியன்,
டேவிட்,ராஜேஷ்குமார் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதி உடைய 2000 த்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் முகாமில் கலந்து கொண்டனர். கோவை, மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து

சுயதொழில் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவனங்கள், டெக்ஸ்டைல் நிறுவனங்கள் என 100 க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் முகாமில் கலந்து கொண்டன.

குறிப்பாக இராணுவபடை பிரிவான அக்னிவீர் திட்டத்தில் ஆள் சேர்க்கவும் இராணுவத்தினர் அரங்கு அமைத்திருந்தனர்.
தனியார் பங்களிப்புடன் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள் பதிவு செய்து இராணுவத்தில் சேரவும் ஆர்வம் காட்டியுள்ளது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!