Skip to content
Home » கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் மாணவரை நிர்வாணப்படுத்தி ராகிங்….. சீனியர் 7 பேர் கைது..

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் மாணவரை நிர்வாணப்படுத்தி ராகிங்….. சீனியர் 7 பேர் கைது..

  • by Authour

கோவையில் உள்ள  பிஎஸ்ஜி என்ற தனியார்  தொழில்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த  திருப்பூர் மாணவர் ஒருவரை அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் , தங்கள் அறைக்கு வரவழைத்து,  ஜூனியர் மாணவருக்கு மொட்டையடித்து  நிரவாணப்படுத்தி ராகிங் செய்துள்ளனர்.  மது குடிக்க பணம் கேட்டு அடித்து உதைத்தும் உள்ளனர். ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவர் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்கள் போலீசார் கைது செய்தனர். மது குடிப்பதற்காக பணம் கேட்டு ஜூனியர் மாணவரை தாக்கி மொட்டையடித்து ராகிங் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலாம் ஆண்டு மாணவரை தாக்கி, மொட்டை அடித்து ராகிங் செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *