Skip to content

கோவை நேரு கல்லூரியில் சீனியர் மாணவரை விடிய விடிய கொடூரமாக தாக்கி வீடியோ வெளியிட்ட ஜூனியர் மாணவர்கள்

கோவை, பாலக்காடு சாலையில் உள்ள நேரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் ,சீனியர் மாணவர் ஒருவரை விடுதியில் வைத்து கொடூரமாக தாக்கினா்.  இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.கல்லூரி விடுதியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் சீனியர் மாணவர் ஒருவரை இரவு முழுவதும் கொடூரமாக தாக்கி உள்ளனர்.பணத்தை எடுத்ததாக குற்றம் சாட்டி சீனியர் மாணவரை மண்டியிட வைத்து, கைகளை உயர்த்த சொல்லி  அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக  முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உள்ளது. தற்போது அந்த மாணவரை பெற்றோர் அழைத்து சென்று மருத்துவமனைவில்   அனுமதித்துள்ளனர்.   கல்லூரி நிர்வாகம் சார்பில் இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற சம்பவங்களை தடுக்க கல்லூரி நிர்வாகங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 13 மாணவர்களையும் டிஸ்மிஸ் செய்வதுடன் இனி எந்த கல்லூரியிலும் இவர்கள் சேர முடியாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை நேரு கல்லூரியில் நடைபெற்ற மாணவர்கள் சஸ்பெண்ட் தொடர்பாக கல்லூரி நிர்வாகம்  அளித்துள்ள விளக்கத்தில் கூறி இருப்பதாவது:
கல்லூரியில் நடந்த இச்சம்பவம் ராக்கிங் அல்ல, முதலாம் ஆண்டு  மாணவர் தங்கி இருந்த அறையில் பணம்  திருட்டுபோனதாக  சந்தேகப்பட்டு சீனியர் PG மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.13 மாணவர்கள் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.  இது தொடர்பாக முதல்வர்   விசாரணை நடத்தி 13 மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்து  உள்ளார்.
இது சம்பந்தமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் சீனியர் மாணவர் ஆகியோரை அவர்களுடைய பெற்றோர் முன்னிலையில் கல்லூரி நிர்வாகம்  விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக  முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

error: Content is protected !!