கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நெகமம் பகுதிகளில் இளைஞர்களிடம் போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருவதாக நெகமம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நெகமம் போலீஸார் நடத்திய விசாரணையில், நெகமம் அடுத்த கம்பளங்கரையில் வசித்து வரும் தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த முரளிகுமார் (51), ஆனைமலை அடுத்த சேத்துமடையை சேர்ந்த சுரேஷ்(29), பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த ஜலீல்(47) ஆகியோர் போதை ஊசிகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து கம்பளாக்கரையில் உள்ள முரளிகுமார் வீட்டில் இருந்து போதை தரக்கூடிய மருந்துகளை போலீஸார் கைப்பற்றி மூவரையும் கைது
செய்தனர் கோவையில் உள்ள மருந்துகடைகளில் போதை தரக்கூடிய வலிநிவாரணி மருந்துகளை நோயாளிகளுக்கு தருவதாக கூறி பெற்று வந்துள்ளார். அதனை சுரேஷ் மற்றும் ஜலீல் மூலம் நெகமம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை
செய்துள்ளார். முரளி குமாரின் வீட்டில் நடத்திய சோதனையில் மனஅழுத்தம் மற்றும் போதையில் இருந்து மீண்டு வருவதற்காக பயன்படுத்தக்கூடிய மருந்துகள் 340 மில்லி மற்றும் 180 மாத்திரைகள், 102 சிரிஞ்சுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மூவரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.