கோவை, பொள்ளாச்சி அருகே வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் 21 வார்டுகள் அடங்கிய பகுதியாகும்,இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்,இவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் கழிவுகள் தினசரி ஏழு டன் பேரூராட்சி மூலம் எடுக்கப்படுகிறது,மாவட்ட ஆட்சியர் கடந்த 2015 ஆம் ஆண்டு கோட்டூர் பேரூராட்சிக்கு 3.8 ஏக்கர் ஒதுக்கப்பட்டு இருந்தது,அருகில் உள்ள தனிநபர் அரசு ஒதுக்கிய நிலத்தை ஆக்கிரமித்ததால் நேற்று வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் முன்னிலையில் இடம் அளக்கப்பட்டது,ஆனால் மதியம் இரண்டு மணிக்கு மேல் இடம் அளந்த சர்வேயர் ஒரு தலைபட்சமாக தனிநபருக்கு இடத்தை அளந்து கொடுக்கப்பட்டது மேலும் இடத்தை சுற்றி அளவு கள் பதிக்கப்பட்டதை தனிநபர் எடுத்து அரசு உத்தரவை மீறி உள்ளார்,இதை கண்டிக்கும் விதமாக ஆனைமலை தாசில்தார் அலுவலகம் முன்பு வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்,வார்டு உறுப்பினர்கள் தாசில்தார் ரேணுகாதேவி பேச்சுவார்த்தையில் நேரடியாக ஆய்வு செய்வதாக தெரிவித்ததன் பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்,முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தங்களது பதவியை ராஜினாமா செய்து இது குறித்து தமிழக முதல்வரிடம் மனு அளிப்பதாக தெரிவித்தனர், தி.மு.க. கட்ச்சி வார்டு உறுப்பினர்கள்தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. பேட்டி- அஜிஸ் (வார்டு உறுப்பினர்)