பேரூராட்சியில் ஊழல் நடந்து உள்ளது விசாரணை கமிஷன் அமைக்க அரசுக்கு கவுன்சிலர்கள் கோரிக்கை.பொள்ளாச்சி- செப்-4 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பேரூராட்சி 21 வார்டு உள்ளது,இதில் அதிமுக மற்றும் சுயேச்சை மீதி உள்ளவர்களில் அதிக அளவில் திமுக சேர்ந்தார்களே வார்டு உறுப்பினர்களாக உள்ளனர் திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பேரூராட்சித் தலைவராக உள்ளார் கடந்த இரண்டு கூட்டங்கள் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற இப்பொழுது கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கும் மீண்டும் நடந்த கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு புறங்கனித்தனர்,மீண்டும் கூட்டம் நடைபெற்ற பொழுது தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்து பேரூராட்சி கூட்டத்திற்கு செல்லாமல் புறக்கணித்தனர் வார்டு கவுன்சிலர் அஜிஸ் கூறுகையில் பேரூராட்சியில் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளது இதை கண்டிக்கும் விதமாக கவுன்சிலர்கள் தொடர்ந்து கூட்டத்தை புறக்கணித்து வருகிறோம்ஆளும் திமுக அரசுக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதமாக தலைவர் செயல் படுகிறார் எனவும் நடைபெற்ற ஊழலுக்கு அரசு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த கவுன்சிலர் கோரிக்கை என தெரிவித்தார்.
பேரூராட்சியில் ஊழல்… விசாரணை கமிஷன் அமைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை..
- by Authour
