கோவை, பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில். ஆற்றின் மையப்பகுதியில் உள்ள கோவிலுக்கு இப்பகுதியில் உள்ள பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.நேற்று இரவு பரவலாக
ஆழியார் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது.இதனால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலின் தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அவசரமாக கோவிலில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தற்காலிகமாக கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.