கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோவிலாகும் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆந்திரா கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிகின்றனர்,இந்தக் கோவிலில் பக்தர்கள் நினைத்த காரியம் நிறைவேற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அம்மனுக்கு காணிக்கை செலுத்துகின்றனர், பக்தர்கள் செலுத்தும் காணிக்கை அறநிலைத்துறை சார்பில் உண்டியல் காணிக்கை திறக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் காணிக்கை எனப்படுகிறது இதை அடுத்து திருக்கோயிலில் உண்டியல் திறப்பில் ரூ.62.43,789/- கிடைக்கப்பெற்றது. அதில் நிரந்தர
உண்டியல் திறப்பில் ரூ. 40,21,019/- தட்டுக்காணிக்கை உண்டியல் திறப்பில் ரூ.22,22,770/- கிடைக்கபெற்றது. பலமாற்றுப் பொன்னினங்கள் 120 கிராம், பலமாற்று வெள்ளியினங்கள் 450 கிராம் கிடைக்கப்பெற்றது. உண்டியல் திறப்பில் அறங்காவலர் குழுத்தலைவர் எஸ். முரளிகிருஷ்ணன், ஈச்சனாரி, அருள்மிகு விநாயகர் திருக்கோயில் உதவி ஆணையர்/செயல் அலுவலர் நாகராஜ், திருக்கோயில் உதவி ஆணையர்/செயல் அலுவலர் .உ.ச.கைலாசமூர்த்தி அறங்காவலர்கள் .டி. ஆர்.திருமுருகன், திருமதி.எஸ். எஸ். மஞ்சுளாதேவி, கண்காணிப்பாளர் திருமதி. த.புவனேஸ்வரி, ஆனைமலை ஆய்வாளர் திருமதி. ப. சித்ரா , சலவநாயக்கன்பட்டி ஊர்ப்பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.