கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் ஆழியார் அணையை ஒட்டி உள்ள கவி அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக வெயிலின் தாக்கத்தினாலும் வறட்சியினாலும் கவியருவி மூடப்பட்டிருந்த
நிலையில் தற்போது சக்தி எஸ்டேட், தல நார் பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையின் காரணமாக கவி அருவியில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கவியருவியில் மீண்டும் தண்ணீர் வருவதனால் ஆறு மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க கடந்த வாரம் வனத்துறையினர் அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் அருகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.