கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குளத்துபுதூர் பகுதி யில் தாத்தூர்-பெரியபோது சாலையோரத் தில் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத் துறை மூலம் 120 மீட்டர் நீளத்துக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதில் 60 மீட் டர் நீள இரும்பு தடுப்புகளை கடந்த 19-ந் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இதுகுறித்து ஆனைமலை போலீஸ் நிலை யத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து துணை சூப்பிரண்டு ஸ்ரீநிதி தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர்.அதில் சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த கிரு பாகரன், அழகேஷ், விக்னேஸ்வரன், ஸ்ரீஜித், சூரிய பிரகாஷ், புதுக்கோட்டை சிவன்கோவில் வீதியை சேர்ந்த சுரேஷ் பாரதி ஆகியோர் இரும்பு தடுப்புகளை திருடியது தெரியவந்தது. அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
நெடுஞ்சாலைத்துறையின் இரும்பு தடுப்பு கள் திருடு போனது குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தோம். அப்போது நெடுஞ்சாலைத்துறையில் வேலை செய்வதாக கூறி இரும்பு தடுப்புகளை சிலர் எடுத்து செல்வதை அப்பகுதி விவசாயிகள் செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்தி ருந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பே ரில் அந்த புகைப்படத்தில் இருந்த நபர் களை பிடித்து விசாரணை நடத்தினோம்.
அதில் சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த ஸ்ரீஜித் திடம் புதுக்கோட்டையை சேர்ந்த சுரேஷ் பாரதி நெடுஞ்சாலைத்துறையின் இரும்பு தடுப்புகளை திருட திட்டம் போட்டு கொடுத் தது தெரியவந்தது. அதன்படி ஸ்ரீஜித் தனது ஊரை சேர்ந்த கிருபாகரன், அழகேஷ், விக் னேஸ்வரன், சூரிய பிரகாஷ் ஆகியோருடன் ரூ.6 லட்சம் மதிப்பிலான இரும்பு தடுப்புகளை திருடி சரக்கு வாகனத்தில் கொண்டு சென்று சுரேஷ் பாரதியிடம் கொடுத்து உள் ளார். அதற்கு அவர், ஸ்ரீஜித் உள்பட 5 பேருக்கும் தலா ரூ.2 ஆயிரத்து 500-ஐ சம்ப ளமாக கொடுத்து இருக்கிறார்
இதையடுத்து ஸ்ரீஜித், சுரேஷ் பாரதி உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் திருடிய இரும்பு தடுப்பு கள் மீட்கப்பட்டு, திருட்டுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.