கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை நா. மூ. சுங்கம் பகுதியில் உள்ள ராமு கலை அறிவியல் கல்லூரியில் மத ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய மரபு விளையாட்டுகளான உறி அடித்தல், கும்மியடி , கயிறு இழுத்தல், குதிரை வண்டி ஓட்டுதல் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டன. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழர்கள் பாரம்பரிய இசையான பறை இசைக்கு நடனம் ஆடினார் மாணவர்கள் மேலும் மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்து புதுப் பானையில் பொங்கல் வைத்து குலவை இட்டு பொங்கல் விழாவை விமர்சையாகவும், உற்சாகமாகவும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் பூட்டன், இலங்கை கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,கல்லூரி மாணவ மாணவிகள் கூறுகையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய பொங்கல் திருவிழா கொண்டாடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் தங்களுடன் பூட்டான் இலங்கை சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் நண்பர்களுடன் உறியடி,கயிறு இழுக்கும் போட்டி,குதிரை வண்டியில் பூட்டான் சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் ஒற்றுமை நிலை நாட்டும் விதமாகவும் எல்லோரும் ஒன்று கூடி பொங்கல் வைத்து கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்.
