கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரளப்பதி கிராமத்தில் வசிக்கும் ரவிசங்கர் இவர் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரளப்பதி கிராமம் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியாகும் இப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான தென்னந் தோப்புகளில் பணியாற்றி வருகின்றனர் சரளப்பதியை சேர்ந்த ரவிசங்கர் செம்மேடு பகுதி சேர்ந்த தேங்க வியாபாரி நித்தியானந்த பிரபு என்பவரிடம் தேங்காய் சுமக்கும் கூலித் தொழிலாக வேலைக்கு சேர்ந்தார் குடும்ப வறுமை காரணமாக ரூபாய் 34 ஆயிரத்து 600 பணத்தை கடனாக பெற்றுள்ளார் இதற்கு நித்தியானந்த பிரபு ஸ்டாம்ப் பேப்பர்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டார் இந்த தொகையை தினசரி வேலை செய்யும் பொழுது வாரத்துக்கு ஒரு முறை பணம் தரும்பொழுது கழித்துக் கொள்வார் என கூறப்படுகிறது,மேலும் ரவிசங்கர் நித்தியானந்த பிரபுவிடம் கடந்த 15 வருடங்களாக வாங்கி பணத்துக்கு வட்டியுடன் கடன் செலுத்தி வந்துள்ளார் இவர்களது குடும்பத்தை கொத்தடிமைகளாக பயன்படுத்தியும் நித்தியானந்தா பிரபு மிரட்டி மேலும் தனக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் மேலும் தர வேண்டும் எனவும் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார் இதனால் அச்சமடைந்த ரவிசங்கர் தனது மனைவி புவனேஸ்வரி மற்றும் குழந்தைகளுடன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து தேங்காய் வியாபாரி நித்தியானந்த பிரபுவால் பாதுகாப்பில்லா சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தங்களது குடும்பத்துக்கு பாதுகாப்பு வேண்டுமென பொள்ளாச்சி சார் ஆட்சியர் பொறுப்பு ஆர்டிஓ விசுவநாதன் இடம் மனு அளித்தனர் மலைவாழ் மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடியினர் குடும்பத்துடன் தஞ்சம்..
- by Authour
