கோவை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர் ஊழியர் ஸ்ரீராம் நேற்று இரவு ஸ்ரீ ராம் பணி முடிந்து பேருந்து சென்று இறங்கி கோவை சாலை நஞ்சே கவுண்டன் புதூர் பகுதியில் சாலையை கடக்க முற்பட்டபோது கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார்,அரசு மருத்துவமனையில் பிரத பரிசோதனை செய்து பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு ஸ்ரீராம் உடல்
கொண்டு வந்த பொழுது மருத்துவர்கள், செவிலியர்கள்,தூய்மை பணியாளர்கள்,108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஒன்று கூடி மலர் வாளையம் வைத்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர், ஊழியர்கள் கூறும் பொழுது ஸ்ரீராம் எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடியவர் எனவும் அவரது குடும்பத்திற்கு தங்களால் முடிந்த உதவி செய்வோம் அவரது நினைவு எங்களது மனதில் என்றும் நிலைத்திருக்கும் என கண்ணீர் மல்க கூறினார்.