கோவை, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் நகராட்சி ஆணையாளர் கணேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் வகையில் 36 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் சாக்கடை வசதி சிறு
பாலங்கள் அமைக்க ரூபாய் இரண்டே கால் கோடி செலவில் செய்யப்பட்டுள்ளது மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நகராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார்.