கோவை, பொள்ளாச்சி அருகே வடுகபாளையத்தைச சேர்ந்த தெய்வானையம்மாள், 75, தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் மூதாட்டி இறந்து இருப்பதாக மேற்கு போலீசாருக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அதில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது.
விசாரணையில், சஞ்சய், கௌதம், ஈஸ்வரி, பானுமதி மற்றும் 16 வயது சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
தெய்வானையம்மாள் வீட்டில், ஈஸ்வரி தனது மகன் சஞ்சய் உடன் குடியிருந்து வந்தார்.
பின்னர், அதே தெருவில் ஈஸ்வரி மற்றொரு தனி வீட்டுக்கு சென்றார். அவ்வப்போது, தெய்வானையம்மாள், உதவி செய்ய சஞ்சய்யை அழைப்பது வழக்கம்.
இந்நிலையில், சஞ்சய்க்கு, பைக்குக்கு பணம் கட்ட, 50 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது.
மூதாட்டியிடம் நகையை பறிக்க திட்டமிட்ட சஞ்சய், 18, அவரது நண்பர் கவுதம், 19, மற்றும் 17வயது சிறுவன் ஆகியோருடன் தெய்வானையம்மாள் வீட்டுக்கு சென்றனர்.
பின்னர் மூதாட்டியை கொலை செய்து, எட்டரை பவுன் நகையை திருடிச் சென்றனர்.
பாட்டி இறந்த தகவல் தெரிந்து கொண்டு அங்கு சென்ற ஈஸ்வரி பீரோவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
இது எல்லா விஷயங்களும் மூதாட்டியின் மருமகளான பானுமதிக்கு தெரிந்தும் மறைத்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, மருமகள் உட்பட 4 பேரையும்மேற்கு காவல் நிலைய
போலீசார் கைது செய்தும் நகை மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்,மேலும்பொள்ளாச்சி கூடுதல் எஸ்பி பிருந்தா உத்தரவின் பேரில்மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிக்குமார் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை 8 மணி நேரத்தில் பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர், பொள்ளாச்சி JM நீதிமன்றம் இரண்டில் ஆஜர் படுத்தி சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் உட்பட ஐந்து பேரையும் கோவை மத்திய சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்,பொள்ளாச்சியில் மூதாட்டி கொலை வழக்கு ஐந்து பேர் கைது செய்தது பரபரப்பாக பேசப்படுகிறது.