கோவை மாநாகர ஆயுதப்பட்டையில் பணியாற்றும் 24 போலீசாருக்கு உடையில் மாட்டும் காமிராக்களை கோவை மாநகர காவல் ஆணையர் இன்று வழங்கினார்.ஆயுதப்படையில் பணியாற்றும் போலீசார் கைதிகளை வழிக்காவல் எடுத்துச் செல்லும் போது அவர்களின் பாதுகாப்பு மாற்றும் கைதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் விதமாக 4 ஆயுதப்படை காவல் வாகனங்களில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வாகனத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார். மேலும், 24 ஆயுதப்படை காவலர்களுக்கு உடையில் காமிராக்களை வழங்கினார்.தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஆயுதப்படை காவலர்கள் கைதிகளை வழிகாவல் எடுத்து செல்லும்போது காவலர்களின் பாதுகாப்பு, கைதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க கேமிராக்கள் வாகனங்களில் பொருத்தபட்டுள்ளது. முதற்கட்டமாக நான்கு வாகனங்களில் காமிராக்கள் பொருத்தபட்டுள்ளன. மேற்கொண்டு மற்ற வாகனங்களில் பொருதப்படும்
வாகனத்தில் பொருத்தபட்ட கேமிராவில் ஆடியோ,வீடியோ இரண்டும் பதிவு செய்யபடும். இந்த காட்சிகளை காமிராகளுக்கான அலுவலகத்திலிருந்து பார்க்க முடியும். மேலும், அதிகாரியின் மொபைலில் காட்சிகளை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. ஆயுதப்படை காவலர்கள் வழிக்காவல் செல்லும் போது அவர்களின் பாதுகாப்பு மற்றும் கைதிகள் தப்பிசெல்லாதபடி கண்காணிக்க, போலீசாருக்கு உடையில் மாட்டும் காமிராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேற்கொண்டு தேவை ஏற்படுவதன் அடிப்படையில் கூடுதல் காமிராக்கள் தரப்படும். காமிராக்களின் பயன்பாடு 24 மணிநேரமும் பதிவு செய்யப்படும் வகையில் உள்ளது. காமிரா பதிவுகள் குறிப்பிட்ட காலங்களுக்கு சேமிக்கபட்டு, தேவையின் அடிப்படையில் வழக்கு விசாரணை உள்ளிட்டவற்றிற்காக பயன்படுத்தபடும்.வடகிழக்கு பருவமழையொட்டி உடனடி முதலுவதவி செய்யும் வகையில் கோவை மாநகர காவல்துறையில் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. வடகிழக்க பருவமழையை சந்திக்க கோவை மாநகரக காவல்துறை தயாராக உள்ளது. அரசு நிதியில் ரூ.55 லட்சம் செலவில் இதுவரை 110 காமிராக்கள் மாநகரில் பொருத்தபட்டுள்ளன. குற்றசம்பவங்களில் செயின்பறிப்பு, வழிப்பறிப்பு உள்ளட்ட சம்பவங்கள் நடக்கும் போது குற்றவாளிகளை கண்டறிய காமிராக்கள் பயனுள்ளதாக உள்ளது. அண்மையில் இரவு நேரத்தில் நடந்த இரு வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து மலுமிச்சம்பட்டியில் பிடிக்க காமிராக்கள் உதவியாக இருந்துள்ளன. பொதுமக்கள் காமிராக்கள் பொருத்த முன்வர வேண்டும்.கோவை மாநகரில் கஞ்சா, போதைப்பொருள்கள் பெரிய அளவில் இல்லை. சிறிய அளவில் விற்பனை செய்பவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இருசக்கர வாகனத்திட்டம் திருட்டில் புது குற்றாவாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். வரும் தீபாவளி உள்ளட்ட பண்டிகைக்காலங்களில் அதிகபடியான காவலர்கள் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்படுவார்கள். கோவை மாநகர காவல்துறையில் கடந்த ஏழு ஏழு மாதங்களுக்கு முன் காலிபணியிடங்கள் நிரப்பபட்டது. இந்த ஜனவரிக்குள் மாநகரத்திற்குள் புதிதாக சேர்க்கப்பட்ட காவல்நிலையங்களில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பபடும்.இவ்வாறு அவர் கூறினார்.