கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு வில் மதுக்கடை ஊழியருக்கு மர்ம நபர்களால் கத்திகுத்து, போலீசார் விசாரனை. பொள்ளாச்சி-மார்ச்-8 கோவை மாவட்டம் கிணைத்து கடவு முள்ளு பாடி கேட் அரசு மதுபான கடையில் உதவி விற்பனையாளராக நாக மாணிக்கம் பணியாற்றி வருகிறார்,நேற்று இரவு கடையை மூடிவிட்டு நாகமாணிக்கம் பிரதான கோவை சாலைக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது இரண்டு நபர்கள் முகவரி கேட்பது போல் நாகமாணிக்கம் அருகில் வந்து திடீரென மர்ம நபர்கள் கால் மற்றும் முதுகு பகுதியில் குத்தி உள்ளனர, இவரின் அலறல் சத்தம் கேட்கவே அருகாமையில் இருந்தவர்கள் ஓடி வந்த பிறகு சம்பந்தப்பட்ட மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர்,பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நாகமாணிக்கம் சிகிச்சை பெற்று வருகிறார்,இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.