இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டு நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக,
கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில்,’G20 University Connect – Engaging Young Minds’ என்கிற தலைப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆளுமைகள் கலந்துகொண்ட கருத்தரங்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர், முனைவர் கே.பிரகாசன் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக, மத்திய வெளியுறவுத் துறையின் ஓய்வு பெற்ற செயலாளர், ராகுல்
சப்ரா,வளிமண்டல மற்றும் பெருங்கடல் அறிவியல் மையம் தலைமை வினயச்சந்திரன்,மூத்த விஞ்ஞானி பிரமோத்,பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் முதல்வர் சுப்ரமணியம் ராஜு மற்றும் மூத்த பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினர். இக்கருத்தரங்கில், ஜி20 மாநாட்டில் பங்குபெறும் சர்வதேச நாடுகளின் முக்கியத்துவம் மற்றும் ஜி 20 மாநாட்டில் ஆலோசிக்கப்படும் சர்வதேச அளவிலான பிரச்சனைகள், பொருளாதார முன்னேற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, வேளாண்மை வளர்ச்சி ஆகியவை குறித்த கருத்துக்கள் பகிரப்பட்டன.