Skip to content

முதலீடு செய்தால் அதிக லாபம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர் கைது…

கோவை ரேஸ்கோர்ஸ் திருஞானசம்பந்தம் சாலையில் ரெனைசன்ஸ் டவரில் எஸ்.கே.எம். டிரேடர்ஸ் என்ற எம்.எல்.எம். நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. பாலச்சந்திரன் என்பவர் 2018 முதல் இந்த நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார் . முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று அவர் ஆசை வார்த்தை கூறியதை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு, மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் 300″க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்கு அசல், வட்டி எதுவும் தராமல் பாலச்சந்திரன் ஏமாற்றிவிட்டதாகவும். இது தொடர்பாக, மாநகர காவல்துறை ஆணையரிடம் ஏற்கனவே புகார்கள் தரப்பட்டிருந்தது.

இந்த நிலையிலே எஸ்.கே.எம்., டிரேடர்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பீளமேடு நேரு நகர் நான்காம் மேற்கு வீதியை சேர்ந்த 51″வயதான கணேசன் என்பவர் காட்டூர் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாகவும் அதற்கு அசல், வட்டி தராமல் ஏமாற்றி விட்டதாகவும் புகார் தந்திருக்கின்றார். புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் பாலச்சந்திரன் உட்பட மூவர் மீது வழக்கு பதிந்தனர். நிதி நிறுவன உரிமையாளர் பாலச்சந்திரனை கைது செய்த காவல்துறையினர் இருவரை தற்போது தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!