கோவை மாவட்டம், கிணத்துக்கடவு நெகமம் அருகே உள்ள வடசித்தூர் பகுதியில் பெரியார் சிலை அப்பகுதிஅரசியல் பிரமுகர்கள், பொது மக்களால் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது, சிலை முழுவதும் இரும்பு கம்பி கூண்டுகளால் மூடப்பட்டுள்ளது, வடசித்தூர் பெரியார் நினைவு சமத்துவபுரம் பெரியார் சிலை மீது யாரோ சமூக விரோதிகள் சாணத்தை சிலைமீது வீசி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த நெகமம் காவல்துறையினர் அவசர அவசரமாக சுத்தம் செய்துள்ளார்கள். இந்தசெயல் செய்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள், கோரிக்கை வைத்தனர். பெரியார் சிலை மீது சாணம் எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
